2008 உலக அழகியாக ரஷ்யாவின் சென்யா சுகிநோவா (Kseniya Sukhinova)
Miss Russia, Kseniya Sukhinova
ரஷ்யாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா (Kseniya Sukhinova) 2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சார்பில் போட்டியில் கலந்துகொண்ட கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் (வயது21 ) இரண்டாம் இடத்தையும் ட்ரினிடாட் டொபாகோ நாட்டைச் சேர்ந்த கேபிரியல் வால்காட் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Parvathy Omanakuttan from India
2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியைத் தெரிவு செய்யும் விழா கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்காவின் ஜோகனஸ்பேர்க் நகரில் நடைபெற்றது.
58 ஆவது உலக அழகிப் போட்டியாக விளங்கும் இப் போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட 100 ற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.
Gabrielle Walcott fromTrinidad and Tobago
இதில் ரஷ்யாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டதாக போட்டி அமைப்பாளர் ஜுலியா மொர்லி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்யாவுக்கு கீரீடம் அணிவிக்கப்பட்டது.
Rochelle Adriana Corea from Sri Lanka
இப்போட்டியில் இலங்கையை சேர்ந்த ரோசெல்ல ஆடிரியானா கொரெ (Rochelle Adriana Corea) என்பவரும் கலந்துகொண்டார்.
இந்திய அழகியாக தெரிவு செய்யப்பட்டு உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற பார்வதி ஓமனக்குட்டன் மிஸ் மலையாளி 2005, மலையாளி மங்கா 2005, கடற்படை ராணி கொச்சி 2006, விசாகப்பட்டினம் 2007 போன்ற பல்வேறு அழகிப் பட்டங்களை வென்றவராவார்.
இவர் ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா பாரியா(1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி(1999),பிரியங்கா சோப்ரா (2000), ஆகியோர் உலக அழகிப் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment