புலிகள் அதிரடித் தாக்குதல் இரணைமடு முன்னரங்கு மீட்பு! - 40 படையினர் பலியானதாக அறிவிப்பு
முறிகண்டி - இரணைமடு முன்னரங்கப் பகுதியில் படையினர் கைப்பற்றிய இரண்டு கிலா மீற்றர் தூரத்தை அதிரடித் தாக்குதல் ஒன்றின் மூலம் தாம் மீட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் நேற்று அறிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டதாகவும், பத்துச் சடலங்களைத் தாம் மீட்டதாகவும் அவர்கள் அறிவித்திருப்பதாக இணையத்தளச் செய்திகள் தெரிவித்தன.
இது தொடர்பாக விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
முறிகண்டியிலுள்ள இரணைமடுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணிவரை விடுதலைப்புலிகளால் நடத்தப் பட்ட அதிரடித்தாக்குதல் மூலம் இந்த முன்னரங்கு மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட முன்னரே விடுதலைப்புலிகளால் மீட்கப் பட்டது.
விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப் புக்களுடன் அவர்கள் கைப்பற்றி இருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர். இதன்பின்னர் அந்த இரண்டு கிலோமீற்றர் நீளமுள்ள முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றிவந்த கப்பலை தாக்கி அழித்ததாக கடற்படை தெரிவிப்பு
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நேற்று அதிகாலை ஆயுதங்களை ஏற்றிவந்ததாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கப் பல் ஒன்றினை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் குறைந்தது இருபது கடற்புலிகள் கொல்லப் பட்டதாகவும் கடற்படை தெரிவித்தது.
கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது உதவி புரிவதற்காக வந்த விடு தலைப் புலிகளின் நான்கு வேகப் படகு களையும் கடற்படையினர் தாக்கி அழித் திருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமடோர் மகேஸ் கருணாரத்னா கூறினார்.
கடற்படையினரின் கரையோரக் காவல் பணியினர் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, முல்லைத்தீவில் இருந்து சுமார் எழுபது கடல் மைல் தொலைவில் உள்ள இந்த சிறிய கப்பலை அவதானித்து அதனை நெருங்கிச் சென்ற போது கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியபடி கப்பல் வேகமாக தப்பியோட
முயற்சித்தது. கடற்படையினர் திருப்பித் தாக்கியபோது அது தீப்பற்றி எரிந்தது என்றும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்களை ஏற்றி வந்த சுமார் 100 அடிநீளமுள்ள கப்பலே தாக்கி அழிக்கப்பட்டதாவும் இருதரப்பினருக்கும் இடையில் மோதல்கள் சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடம் இருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment