எதுதான் ஒழுங்காக நடக்கிறது?
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வோர் தலைக் கவசம் அணிய வேண்டுமென்பது இலங்கையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அணியாது பயணிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
தலைக் கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் செல்வோரைக் கண்காணிப்பதில் போக்குவரத்துப் பொலிசாரின் கழுகுக் கண்பார்வை எப்போதுமே உள்ளது.
தலைக் கவசம் அணியாது செல்வோர் இவர்களின் கண்களில் பட்டாலே போதும் உடனடியாக சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கைப்பற்றி விட்டு அபராதத்துக்கான ஆவணத்தை கையில் கொடுத்து விடுவார்கள்.
இதுதான் இப்போது நடப்பது..
ஆனால்.. அதே தலைக் கவசத்தை மறு பக்கத்துக்கு மாற்றி அணிந்து பயணிப்போருக்கும் அபராதம் விதித்தால் முதலில் அபராதம் செலுத்து வேண்டியவர் இந்த பொலிஸ் கான்ஸ்டபிளாகத்தான் இருக்க முடியும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment