திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு பின் 70 வயதில் தாயான பெண்
அரியானா மாநிலத்தில் 70 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாலாராம் (வயது 72) ராஜோ தேவி (வயது 70) தம்பதியினருக்கே திருமணமாகி 50 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்தின் உரிமையாளரான விவசாயி பாலாராமின் சொத்தை அபகரிக்க உறவினர்கள் பலரும் முயன்று வந்துள்ளனர். இந்நிலையில் வயதான பெண்களும் கருத்தரிப்பதற்கான் வாய்ப்புகள் இருப்பதையறிந்து மேற்படி தம்பதியினர் அரியானா மருத்துவ சாலையில் டாக்டர் பிஷ்னோயைச் சந்தித்தனர்.
இதையடுத்து ராஜோ தேவிக்கு சிகிச்சை ஆரம்பமானது. வேறொரு பெண்ணின் கருமுட்டை, வேறொரு ஆணின் உயிரணுவை சேர்த்து செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை ராஜோ தேவியின் கருப்பையில் டாக்டர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி ராஜோ தேவிக்கு பெண் குழந்தையொன்று பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். கடந்த 2006ஆம்
ஆண்டு ருமேனியா நாட்டைச் சேர்ந்த அட்ரியனா என்ற 67 வயது பெண் குழந்தை பெற்றது இது வரை உலகச் சாதனையாக இருந்தது. இப்போது, 70 வயதில் குழந்தை பெற்றுள்ள ராஜோ தேவி உலகிலேயே அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த வாரம், சென்னையில் 58 வயது பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment