ரஷ்ய பிரதமர் புட்டினை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் நான்
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினின் தாய் தானென்று உரிமை கோரி, ஜோர்ஜிய பெண்மணியொருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விளாடிமிர் புட்டினின் குழந்தைப் பருவ வாழ்க்கையானது எவரும் அறியாத இரகசியமாக இதுவரை காலமும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கோரி நகருக்கு அண்மையிலுள்ள கிராமமான மெதேகியில் வசித்து வரும் பெரா புட்டினா (82 வயது) என்ற மேற்படி பெண்மணி, புட்டின் 10 வயதாக இருக்கும் போதே அவர் தன்னிடமிருந்து பிரிய நேரிட்டதாக கூறினார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்த தென் ஒசீசியா தொடர்பில் ஏற்பட்ட பிணக்கின் போது, ரஷ்யப் படையினரால் கோரி பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"வொவா' என செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட விளாடிமிர் புட்டின், அவரது இரண்டரை வயதுக்கும் 10 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் மெதேகி கிராமத்தில் வசித்ததாக தெரிவித்த பெரா புட்டினா, 1959 ஆம் ஆண்டு புட்டின் மெதாகி பாடசாலையில் ஜோர்ஜிய பிரஜையாக கல்வி கற்றதாக கூறினார்.
விளாடிமிர் புட்டினின் தந்தை ரஷ்யர் எனவும் தான் கர்ப்பமாக இருந்த சமயம் அவர் வேறொரு பெண்ணை மணந்ததாகவும் புட்டினா குறிப்பிட்டார். புட்டின், 1950 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி பிறந்ததாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அவர் அதற்கு சரியாக இரு வருடங்கள் முன்பாக பிறந்ததாக அவர் தெரிவித்தார். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கணவர் கொடுத்த
தொந்தரவு காரணமாக, 1960 இல் புட்டினை ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க்கிலுள்ள கணவரது பெற்றோரிடம் அனுப்ப நேர்ந்ததாக புட்டினா கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment