குழந்தைகளை கொன்று குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய்
Monika H. hiding her face as she enters the courtroom in Siegen, western Germany. The 44-year-old mother, tried for having killed three of her newborn babies, was sentenced to a four years and three months imprisonment for double manslaughter on Monday, Dec. 1, 2008. The statute of limitations on the third child, who died more than 20 years ago, had expired.
பெற்ற பெண் குழந்தைகள் இரண்டையும் கொன்று குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த ஜேர்மனிய பெண்ணுக்கு நான்கு வருடத்திற்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிட்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொனிகா ஹல்பே (வயது 44) என்ற மேற்படி பெண், 1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தனக்கு பிறந்த பெண் குழந்தைகளையே இவ்வாறு கொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் 1986 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூன்றாவது பெண் குழந்தையின் மரணத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை என கருதப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி இரு குழந்தைகளையும் தான் படுகொலை செய்யவில்லை என வாதிட்ட மொனிகா, இறந்த குழந்தைகளை எப்போதும் தனக்கருகே வைத்திருக்க வேண்டும் என விரும்பியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்ததாக கூறினார்.
வென்டெனிலுள்ள Wenden தனது வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் ""பீஸா'' உணவைத் தேடிய மொனிகாவின் இளவயது மகனாலேயே மேற்படி சடலப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment