இரு கைகளையும் இழந்த பெண் விமானம் செலுத்த அனுமதிப்பத்திரம் பெற்று சாதனை
Pilot Flies Without Arms - The most amazing bloopers are here
முயற்சித்தால் முடியாதது உலகில் எதுவுமில்லை என நிரூபித்துள்ளார் அமெரிக்க அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஸிகா கொக்ஸ் என்ற 25 வயது யுவதி.
பிறப்பிலேயே இரு கைகளும் இல்லாது பிறந்த ஜெஸிகா கொக்ஸ், விடா முயற்சியுடன் கால்களால் விமானத்தை ஓட்டுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு விமானிக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் உலகில் கால்களைப் பயன்படுத்தி விமானத்தை செலுத்த அனுமதிப்பத்திரம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
மேற்படி விமான அனுமதிப்பத்திரத்தின் ஊடாக தரையிலிருந்து 10,000 அடி உயரத்தில் இலகு ரக விளையாட்டு விமானமொன்றை செலுத்துவதற்கான அனுமதியை ஜெஸிகா கொக்ஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமான அனுமதிப்பத்திரத்தை பெற்றதையடுத்து, தனது சாதனை முயற்சி தொடர்பில் ஜெஸிகா கொக்ஸ் விபரிக்கையில், ""என்னால் முடியாது என நான் ஒரு போதும் கூறியதில்லை. நான் செய்வேன்; என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு இருக்கிறது. வானத்தில் பறப்பது என்பதை உலகிலேயே மிகவும் அற்புதமான அனுபவமாக உணர்கிறேன்'' என்று கூறினார்.
ஜெஸிகா கொக்ஸின் விமானப் பயிற்சியாளரான பற்றிஷ் தராவீக் குறிப்பிடுகை யில், ""அவர் மிகச் சிறந்த விமானி.
அவருக்கு விமானப் பயிற்சியளிப்பது வெற்றிகரமாக அமையுமா என பலரும் சந்தேகம் கொண்டிருந்தனர்.
ஆனால், ஜெஸிகா கொக்ஸ், தனது காரை தனது இரு கால்களைப் பயன்படுத்தி செலுத்தி இங்கே வந்தபோது, அவரால் எதுவித பிரச்சினை யுமின்றி விமானத்தைச் செலுத்த முடியும் என நான் உணர்ந்தேன்'' என்று தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment