முற்றாக முகத்தின் கீழ்ப்பகுதி இல்லாமல் பிறந்த இளைஞனுக்கு நாடி உருவாக்கம்
முகத்தின் கீழ் அரைப் பகுதியின்றி விசித் திரமான முறையில் பிறந்து வளர்ந்த இளை ஞர் ஒருவருக்கு, பல தொடர் சத்திர சிகிச்சைகள் மூலம் புதிய நாடியையும் தாடையையும் உருவாக்கி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அலன் டொஹெர்தி என்ற இந்த இளைஞன் பிறந்த போது, அவர் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது.
இந்நிலையில் உள்ளூர் மக்களின் மில்லியன் கணக்கான டொலர் நிதியுதவியு டன் தொடர் சத்திர சிகிச்சைகள் மூலம் நாடியையும் தாடையையும் பெற்றுள்ளார் அலன்.
அலனின் தொடை எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதியையே அலனின் தாடை மற்றும் நாடியாக மருத்துவர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஒரு வருடத்துக்கு மேலாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட 9 சத்திர சிகிச்சைகள் மூலம் அலனின் வெளித் தோற்றத்தை ஓரளவு சீர்படுத்த முடிந்தபோதும், அவரால் சரியான முறையில் பேச முடியாதுள்ளதாகவும் குழாய் மூலமே உணவை உள்ளெடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர் முழுமையாக குணமடைய மேலும் பல சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment