சிங்களப் புலி
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமிழ் வைத்தியர்களுக்கு சிங்கள புலி என்ற பெயர் குறிப்பிட்டு கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப் பட்ட வைத்தியர்கள், வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளா ர்கள். "சிங்கள வைத்தியர் கொல்லப்பட்டால், நீயும் கொலை செய்யப்படுவாய் - சிங்கள புலி" என்ற வாசகங்கள் கையெழுத்தில் பொறிக்கப்பட்டு இந்த வைத்தியர்களின் வீட்டு முகவரிகளுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கடித உறையிலிடப்பட்ட இந்த எச்சரிக்கை மிரட்டல் கடிதங்கள், நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு தபாலகத்தில் இடப்பட்டதற்கு அடையாளமாக அந்த அலுவலக முத்திரை காணப்படுவதாகத் தெ?விக்கப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய நிபுணர் ஒருவருக்கு இந்தக் கடிதம் முதலில் கடந்த வாரம் வந்ததாகவும், இது குறித்து அவர் உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து தமிழ் வைத்தியர்களுக்கும் இவ்வாறான கடிதங்கள் தபால் மூலமாக வந்து கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து பொலிஸாரிடம் இதுபற்றி முறையிடப்பட்டிருப்பதாகவும் தெ?விக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment