இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை
இலங்கையில் நடந்த சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.மன்றம் விசாரணைகளை நடத்தவேண்டும் என ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
புகார்கள்
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணைய தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் ஒரு கத்தோலிக்க அனாதை ஆசிரமத்திலிருந்து சிறார்களை பலவந்தமாக கடத்திச்சென்றதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கபடுபவர்களுக்காக வழக்குகளில் வாதாட முன்வந்துள்ள வழக்குரைஞர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செவ்வி
மேற்சொன்ன புகார்கள் குறித்து ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஆசிய மனித உரிமை இயக்கம் ஐ.நா மன்ற தலைமைச்செயலரிடம் கோரியுள்ளன.
இந்நிலையில் குறிப்பிட்ட வீடியோ படத்தில் காட்டப்பட்ட சம்பவம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது தொடர்பில் ஆசிய மனித உரிமை இயக்கத்தின் செயல் இயக்குநர் பசில் பெர்னாண்டோ தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment