மெக்ஸிகோ அழகுராணி கைது
மெக்ஸிகோவின் அழகுராணியான லவ்ரா ஸுனிகாவும் ஏனைய ஏழு பேரும் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் பணம் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு மெக்ஸிகோவிலுள்ள குவாடலாஜராவுக்கு (Guadalajara) அண்மையிலுள்ள சோதனைச்சாவடியில் லவ்ராவும் ஏனைய ஏழு பேரும் பயணம் செய்த கார் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட போதே மேற்படி ஆயுதங்களும் பணமும் கைப்பற்றப்பட்டன.
23 வயதான லவ்ரா கடந்த ஜூலை மாதம் தனது சொந்த மாநிலமான சினாலோவாவில் அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
பொலிஸார் காரை பரிசோதிக்க முற்பட்ட போது தான் பொருட் கொள்வனவுக்காக பொலிவியாவிலிருந்து கொலம்பியாவுக்கு பயணம் செய்வதாக லவ்ரா தெரிவித் துள்ளார்.
இரு "ஏ.ஆர்.15' துப்பாக்கிகள், 38 விசேட கைத் துப்பாக்கிகள், 633 துப்பாக்கி ரவைத் தொகுதிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களும் 53,000 அமெரிக்க டொலர் பண?ம் லோரா பயணித்த காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி பாதையில் போதைவஸ்து கடத்தல் குழுவொன்று பயணிப்பதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே லவ்ராவின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அந்த வாகனத்தில் அவர் இருப்பார் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச அழகுராணிப் போட்டியில் மெக்ஸிகோவை பிரதிநிதித்துவப்படுத்தும்படி லவ்ரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment