விடுதலைப் புலிகளை ஆதரித்து மண்டபம் முகாமில் சுவரொட்டிகள்
விடுதலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய அரசை கண்டித்தும் மண்டபம் அகதி கள் முகாம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இம்?காமில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தனி ஈழக்கனவு எப்போதும் உண்டு. அவ்வப்போது புலிகளை ஆதரித்து சுவரொட்டிகளை ஒட்டியும், சுவரில் எழுதியும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவர்.
இவ்வாறே நேற்று முன்தினம் மண்டபம் முகாமில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், "விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு, தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் கொடு' என்ற வன்முறையை தூண்டும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
முகாம் நுழைவாயிலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் அகதிகளுக்கான தனி பொலிஸாரும் இருப்பது வழக்கம். இப் பாதுகாப்பை மீறி முகாமில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவரொட்டிகள் புலிகள் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருக்கலாம் என்பதால், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment