இலங்கையின் கிழக்கில் ஆயிரக்கணக்கான இளம் விதவைகள்
இலங்கையில் கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விதவைகள் இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தேசநிர்மாண அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இவர்களில் அநேகமானோர் தாய்மார்கள் என்றும் வறுமைகோட்டுக்கு கிழேயுள்ளவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர், கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாகவே தமது கணவர்களை இழந்துள்ளார்கள்.
இங்குள்ள இளம் விதவைகளைப் பொறுத்தவரை சமூகத்தில் வாழும் போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுப்பதாக மகளிர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
தங்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவிகளை அளிப்பதன் மூலமே பொருளாதார ரீதியில் தங்களால் முன்னேற முடியும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு விசேட திட்டங்கள் வெளிநாட்டு உதவிகளுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாகாண சகாதார சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறுகின்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment