இருதரப்பு பாரிய மோதலையடுத்து முள்ளிவளை-நெடுங்கேணி வீதி மூடப்பட்டது
முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பலத்த மோதல்; இடம்பெற்று வருகிறது.
முள்ளியாவலை-நெடுங்கேணி வீதயில்; தற்போது இருதரப்பினருக்குமிடையே மோதல்கள் இடம்பெறுவதால் இந்த வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதியே இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்த இராணுவத்தினர், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை இந்த வீதியால் அனுப்புவதில் எவ்வித தடையுமில்லையெனவும் தமக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அம்பகாமத்துக்குள் படையினர் பிரவேசம்
இதேவேளை இராணுவத்தின் 3ஆவது படையணி இன்று காலையில் ஒலுமடு கிழக்கு ஏ-9 வழியாகசச் சென்று அம்பகாமம் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment