இலங்கை பாதுகாப்பு இணையத் தளத்தில் வைரஸ்; தமிழர்களின் தகவல்கள் வைரஸ் மூலம் திருட்டு!
இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்தளத்தில் வைரஸ், அவசர அறிக்கை புறக்கணிக்க வேண்டாம்!
இலங்கை அரசாங்கம் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மொழியிலான பாதுகாப்பு இணையத்தளத்தில்(விடிவு.LK) (www.vidivu.lk) வைரஸ் இருப்பதை புலம் பெயர் கணணி நிபுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திற்கு செல்வோரின் கணணியில் TROJAN Js/Xilos வைரஸ் தாமாகவே உள்நுளைந்து கணணியின் IP முகவரி , மற்றும் இரகசிய தகவல்களை எடுத்துச் செல்கிறது.
ANTI-VIRUS எனப்படும் பாதுகாப்பு மென் பொருள் உங்கள் கணணியில் இருந்தால் கூட இவை உங்கள் கணணியை தாக்கவல்லதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வைரஸ் உள்நுளைந்து உங்கள் இரகசிய தகவல்களை திரட்டியபின்னர் ADOBE மென்பொருளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நீங்கள் உபயோகிக்கும் இணையம் மூலமாகவே வெளியில் சென்று வைரஸை இயக்கும் இலங்கை அரசிற்கு தகவலை வழங்க முற்படும்.
அப்போது மட்டுமே உங்கள் கணணியில் உள்ள வின்டோஸ் நெருப்புச் சுவர்(Windows Fire Wall) உங்கள் அனுமதியை கோரும், ஏற்கனவே தன்னை ADOBE என்ற பெயரில் வைரஸ் உருமாற்றி இருப்பதால் நீங்களும் அனுமதி வழங்குவீர்கள். இதனால் சேகரித்த தகவலுடன் வைரஸ் தப்பி சென்றுவிடும்.
குறிப்பாக இவ்வைரஸ் ஆனது இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் தமிழ் பதிப்பில் மட்டுமே உலாவவிடப்பட்டுள்ளது. ஆங்கில மற்றும் சிங்கள பதிப்புகளில் இவை இடப்படவில்லை. இதிலிருந்து இவர்கள் தமிழர்களின் கணணிகள் மீதே குறிவைத்துள்ளனர் என்பது புலப்படுகிறது.
இலங்கை பாதுகாப்பு இணையத்திற்கு சென்று வந்தவர்கள் உடனடியாக தமது கணணியில் வைரஸ் இருக்கிறதா என முழு அளவிலான (Full Virus Scan) முடிக்கி விடவும், சந்தேகத்துக்கிடமான முறையில் கணணி செயல்பட்டால் அல்லது உங்கள் கணணியில் இருந்து ஏதாவது தகவல் வெளியேற வேண்டும் என அனுமதி கேட்டால் மிக அவதானமாக அதை தடை செய்யவும்.
தற்போது மைக்கிரோ மென் பொருள் தயாரிக்கும் நிறுவனமான Micro Soft ,புதிதாக ANTI-VIRUS (LIVE ONE CARE) எனப்படும் வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை இலவசமாக 90 நாட்கள் பாவனையில் விட்டுள்ளது. இதனை தரையிறக்கம் செய்து உங்கள் கணனியில் இடுவதன் மூலம் உங்கள் கணனியை துல்லியமாக பாதுகாக்கலாம்.
http://onecare.live.com/standard/en-gb/install/install.htm
http://www.tamilseythi.com/thozilnudpam/lanka-defence-news-2008-12-15.html
0 விமர்சனங்கள்:
Post a Comment