முல்லைத்தீவு மருத்துவமனை மீது எறிகணைத்தாக்குதல்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு அரசாங்க மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.
இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், முல்லைத்தீவு மாஞ்சோலை, முள்ளியவளை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்த எறிகணை தாக்குதல்களின்போது பொது வைத்தியசாலை பாதிக்கப்பட்டதையடுத்து, அது செயலிழந்துள்ளதாக அந்த வைத்தி்யசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வி.சண்முகராஜா தெரிவிக்கின்றார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
அம்பகாமத்தை கைப்பற்றியதாக இராணுவம் கூறுகிறது
இதற்கிடையே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள அம்பகாமம் கிராமப்பகுதியைப் இலங்கைப்படையினர் இன்று காலை தம்வசப்படுத்தியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
மாங்குளத்திற்கு கிழக்கே சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தப் பகுதி இரண்டு தினங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
BBC Tamilossai
0 விமர்சனங்கள்:
Post a Comment