இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மைக்ரோசொப்டின் செயற்பாடுகள்
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் ஆற்றலை மேம்படுத்தும் முயற்சியில் மைக்ரோசொப்ட்
மைக்ரோசொப்ட் நிறுவனமானது கல்வி அமைச்சுடன் இணைந்து நவோதயம் பெற்ற கிழக்கு ஆசிரியர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதிப் பாடநெறியினை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
நாட்டிலுள்ள பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற அரசாங்கத்தினது அடிப்படை நோக்கங்களுடன் ஒன்றியதாக வளங்கள் முதலீடு செய்யப்பட வேண்டிய பிரதேசமாக கிழக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்ததன் பின்னர் அரசாங்கம் நிலையான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியினை உட்புகுத்துவதற்கு முயற்சிக்கின்ற முக்கிய பிரதேசங்களுள் ஒன்றாக அது மாறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அதன் விளைவாக பொருளாதார ரீதியில் சுபீட்சத்தினை பெற்றுக் கொடுப்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டு நிகழ்ச்சித் திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதில் நவீன கல்வி முறைமைகளின் அறிவுடைமையானது முக்கிய பாத்திரம் வகிப்பதுடன் ஏனைய பகுதிகளிலுள்ளவர்களுடன் இணை போடுவதற்கும் அவர்களை ஆளுமைப்படுத்துகின்றது.
எண்மானம் (Digital) உள்வாங்கலின் காரணமாக தகவல் தொழில்நுட்ப கல்வியானது நாட்டில் முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தைப் போல குறைந்த அபிவிருத்தியும் வளப்பற்றாக்குறையும் நிலவுகின்ற பிரதேசங்களில் அது மேலும் முக்கிய தேவையாகவும் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப எழுத்தறிவினை உயர் மட்டத்தில் ஏற்படுத்திப் பேணுவதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனமானது கல்வி அமைச்சுடன் இணைந்து ஆசிரியர்களை சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதி பாடநெறியினூடாக உட்புகுத்துவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
""21ஆம் நூற்றாண்டினது அறிவுச் சமுதாயத்திற்குள் மாணவர்களையும், ஆசி?யர்களையும் எடுத்துச் செல்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மீதான அறிவானது மேம்படுத்தப்பட வேண்டியதொன்றென நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால் "கற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் பங் காளர்கள்' என்ற மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினது பெறுமதி மிக்க பங்குடைமையின் கீழே நாம் அவர்களுடன் இணைந்து கிழக்கிலுள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதி பயிற்சிப் பாடநெறியினை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொண்ட பின்னர் கல்வித் தொகுதி எங்கும் அது பரவி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப எழுத்தறிவு மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளில் துரித வளர்ச்சியினை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகின்றேன்'' என இரண்டாம் நிலைக் கல்வி நவீனமயமாக்கல் செயற்றிட்டம் II இனது செயற்றிட்டப் பணிப்பாளரான அனுர திசாநாயக்க கூறினார்.
இசுறு பாடசாலைகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளில் புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கி உட் கட்டமைப்பினை அபிவிருத்தி செய்யும் ஏற்பாட்டினை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான புதிய அறிவினையும் வழங்கி ஆளுமைப்படுத்துகின்றது.
கிழக்கு மாகாணமானது பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண நவோதயம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல அபிவிருத்திச் செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களை தத்தமது வீடுகளில் மீளக் குடியமர்த்துகின்ற பல்வேறு மனிதாபிமான செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன் இடம்பெ யர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலைகள் தத்தமது கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண பாடசாலைகளின் கல்வி வசதிகளில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி கொள்ளளவுகளை ஸ்திரப்படுத்துகின்ற சிறந்த பங்களிப்பினை கல்வியமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தினை ஆளுமைப்படுத்துகின்ற இலக்கினை பூர்த்தி செய்கின்ற வகையில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் தகைமைகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தரமுயர்த்தப்பட வேண்டியுள்ளன. கல்வி அமைச்சும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் இணைந்து அரசாங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்திசைக்கின்ற வகையில் கிழக்கில் 1300 ஆசிரியர்களுக்கு சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதி பயிற்சிப் பாடநெறியினை வழங்கவுள்ளன.
கல்வி அமைச்சினது இரண்டாம் நிலைக் கல்வி நவீனமயமாக்கல் செயற்றிட்டம் II மற்றும் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையிலான பங்குடைமையின் கீழ் விசேட சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதி பாடநெறிப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலமாக புத்தாக்க ஆசிரியர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற "கற்றலில் பங்காளர்கள்' நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இது விளங்குகின்றது.
கிழக்கு மாகாணத்தில் IDM மற்றும் Gateway ஆகியவற்றில் அமையப் பெற் றுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் சான்றுபடுத்தப்பட்ட பயிற்சி நிலையங்களின் ஊடாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவை பகுதியளவில் மைக்ரோசொப்டினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இரண்டாம் நிலைக் கல்வி நவீன மயமாக்கல் செயற்றிட்டம் II இனது கிழக்கு மாகாண அலுவலகத்தின் ஊடாக கல்முனை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பயிற்சிநெறிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கணினி எழுத்தறிவின் அதிகரிப்பு, மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப போட்டிகளுக்காக கிடைக்கப் பெறுகின்ற நுழைவுகளின் எண்ணிக்கை, மாகாணத்தில் பொது தகவல் தொழில்நுட்ப அறிவின் சித்தியெய்துகின்ற வீதம், கல்வியின் தரத்தில் முற்றுமுழுதான உயர்ச்சி போன்ற தரக்கணிப்பு அளவீடுகளின் மூலமாக பெறுபேறுகளை கல்வி அமைச்சு அளவீடு செய்யும். கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஆளுமைப்படுத்துவதன் மூலமாக 21ஆம் நூற்றாண்டின் தேவையாகவுள்ள ஆற்றல்களுடனும், அறிவுடனும் புரிந்து கொள்கின்றவர்களாக அவர்களை உட்படுத்தி மாணவர் ச?தாயத்திற்கு நவீன மேலதிக அறிவினை ஏற்படுத்த முடியுமென கல்வி அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது. அவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு தொழில்நுட்ப ஆற்றலை வழங்குவதற்காக கீழ்மட்ட நிலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதன் தேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வலியுறுத்துகின்றது.
சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதி பாடநெறியானது ஐரோப்பா எங்கிலும் தொழிற்சாலைகளில் தகவல் தொழில்நுட்ப ஆற்றல் மட்டங்களை அதிகரித்து தகவல் தொழில்நுட்ப பாவனையை விளைவித்துள்ளது.
சர்வதேச கணினி முன்னெடுப்பு அனுமதி பாடநெறியானது 148 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 7 மில்லியனுக்கும்அதிகமான விண்ணப்பதாரிகளுடன் உலகின் மிகப் பாரிய முடிவுபாவனையாளர் கணினி ஆற்றல்களின் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டமாக காணப்படுகின்றது. சர்வதேச அளவில் அரசாங்கங்கள், கணினி சமூதாயங்கள், சர்வதேநிறுவனங்கள் மற்றும் வர்த்தகக் கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றினால் ஆதரவளிக்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழினை வழங்குகின்ற சர்வதேச நியமமாக இது காணப்படுகின்றது.
வீரகேசரி 16.12.08
0 விமர்சனங்கள்:
Post a Comment