அங்கவீனமுற்ற இளைஞனை திருமணம் செய்த பட்டதாரி பெண்
திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்றோ?ன் எதிர்ப்பின் மத்தியில் இரண்டு கால்களும் செயலிழந்த இளைஞர் ஒருவரை பட்டதாரி பெண்ணொருவர் திருமணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்த அய்யாச்சாமி (வயது 28) என்பவரை பிரியதர்சினி (வயது 23) என்பவர் இவ்வாறு திருமணம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அய்யாச்சாமி, பேக்கரியொன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவரும் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த தமிழ் இலக்கிய பட்டதாரி பிரியதர்சினியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
பிரியதர்சினியின் வீட்டில் எதிர்ப்பு காணப்பட்டதால் இருவரும் கோவை மாவட்டம் அவினாசியில் ஒன்றரை மாதத்திற்கு முன்பு பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
இதை அறிந்த பிரியதர்சினியின் பெற்றோர் அவினாசிக்கு சென்று பிரியதர்சினியின் சான்றிதழ்களை கொடுத்தனுப்புவதாகக் கூறி மைக்கேல்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பிரியதர்சினி தனது மாமியார் பழனியம்மாளுடன் மைக்கேல்பாளையத்தி ற்கு வந்தார். பிரியதர்சினியை பிடித்து வைத்துக்கொண்டு பழனியம்மாளை பெண்ணின் பெற்றோர் விரட்டியடித்தனர்.
இது குறித்து பழனியம்மாள் திண்டுக்கல் மாவட்ட பொலிஸ்ஸில் புகாரிட்டார். புகார் குறித்த விசாரணையின் போது பிரியதர்சினியின் பெற்றோர் அங்கவீனமுற்ற அய்யாசாமியால் எனது மகளை எப்படி காப்பாற்ற முடியும் என கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து அய்யாசாமியின் சகோதரர்கள் மூவரும் சேர்ந்து தங்களது 3 இலட்ரூபா மதிப்புள்ள வீட்டை எழுதிக்கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட சமாதானத்தால் தம்பதியினர் சேர்ந்து வாழ பெண் வீட்டார் அனுமதித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment