தனது அழகு மேம்பாட்டு சத்திரசிகிச்சைக்காக புதிதாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை விற்ற தாய்
தன்னுடைய அழகு மேம்படுத்தல் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் பெறும் பொருட்டு தனக்குப் புதிதாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை 13,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்த பெல்ஜிய பெண் ஒருவர், அந்நாட்டுப் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளõர்.
கென்ட் எனும் இடத்தைச் சேர்ந்த சோனியா றிங்கொயர் (31 வயது) என்ற பெண்ணே தனது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி தனது தோற்றத்தை அழகுபடுத்தும் ?கமாக தனது இரட்டைக்குழந்தைகளை சாரி லெவி என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார்.
மேற்படி பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து பேதம் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழும் அவரது கணவர் மார்க் பொப் (48 வயது) செய்த முறைப்பாட்டினையடுத்தே அப்பெண் கைது செய்யப்பட்டார்.
எனினும், குழந்தைகளை விற்பது தொடர்பில் தடைசெய்யும் சட்டம் எதுவும் பெல்ஜியத்தில் இல்லை என்ற காரணத்தால் விடுதலை செய்யப்பட்ட சோனியா, தற்போது பொலிஸ் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
தனது அழகு சிகிச்சைக்காக பணம் கேட்டு மார்க் பொப்பை நச்சரித்த சோனியா, அவருடனான கருத்து பேதத்தின் பின் மிட்ச் என்ற புதிய காதலரைத் தேடிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது அழகு சிகிச்சைக்காக சுலபமாக பணம் சேர்க்கும் ஒரு வழியாக தனது இரட்டைக் குழந்தைகளை விற்க முடிவெடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment