விசித்திர திருமணம்
பறந்து வந்த ஆந்தையொன்று திருமண மோதிரங்களை கொண்டு வந்து தர திருமண சாட்சியாக வளர்ப்பு நாய் ஆஜராகியிருக்க காதல் ஜோடியொன்று திருமண பந்தத்தில் இணைந்த விசித்திர சம்பவம், பிரித்தானியா வில் கிரேட்டர் மான்செஸ்டர் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆந்தையானது பறந்து வந்து மணமகன் கிரெய்க் வில்ஸனின் கைகளில் அமர்ந்து மோதிரங்களை கொடுக்க, அவர் அதனை மணமகள் ஸியன் டேவிஸின் கரங்களில் அணிவித்து விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
லைட்கேட் எனும் இடத்தில் அமைந்துள்ள வைட் ஹார்ட் என்ற திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த விசித்திர திருமணம் தொடர்பான தகவல், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மணமகனின் உறவினரான ஹெலன் சட்பீல்ட் கடந்த 8 வருடங்களாக பறவை நிலையமொன்றை நடத்தி வருகிறார். அவரது நிலையத்திலிருந்தே திருமணத்துக்கான மேற்படி ஆந்தை பெறப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment