இரு கைகளை இழந்தும் மனம் தளராது கால்களைப் பயன்படுத்தி காரோட்டிய நபர்
வீதிச் சோதனை நடவடிக்கையின் போது காரொன்றை நிறுத்திய சீனப் பொலிஸார், காரின் சாரதி ஆசனத்தில் இரு கைகளும் இல்லாத ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஸிங் ஷென் (42 வயது) என்ற மேற்படி நபர், தொழிற்சாலை விபத்தொன்றில் தனது இரு கைகளையும் இழந்ததாகவும் அதைத் தொடந்து பல வரு டங்களாக கால்களைப் பயன்படுத்தி காரோட்டி வருவதாகவும் தெரிவித்து பொலிஸாரை வியப்பில் ஆழ்த்தினார்.
தான் இரு கைகளைக் கொண்ட ஒருவரை விட மிகவும் பாதுகாப்பான முறையில் காரைச் செலுத்துவதாக அவர் கூறினார்.
எனினும், வழமைக்கு மாறான முறையில் காரைச் செலுத்தியமைக்காக அவரை பொது பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment