கார்லா புரூணியின் நிர்வாண புகைப்படம் பொறிக்கப்பட்ட பைகளால் பெரும் சர்ச்சை
பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்க்கோஸியின் மனைவி கார்லா புரூணியின் நிர்வாணப் புகைப்படம் பொறிக்கப்பட்ட பைகளை விற்பனை செய்தமைக்காக கம்பனியொன்றுக்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பிரான்ஸுக்கு சொந்தமான இந்து சரித்திர தீவான றீயூனியனின் தலைநகர் செயின்ட் டெனிஸில் செயற்படும் பார்டன் என்ற கம்பனிக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை தனது விற்பனைப் பொருளில் பயன்படுத்தியமைக்காக 160,000 அமெரிக்க டொலரை மேற்படி கம்பனி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
1993 ஆம் ஆண்டு எயிட்ஸ் நோய்க்கு எதிரான பிரசார நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட மேற்படி நிர்வாணப் புகைப்படத்தை தமது உற்பத்திப் பொருளில் பயன்படுத்த புரூணியிடமோ அன்றி அப்புகைப்படத்தை எடுத்த மைக்கல் கொம்டேயிடமோ பார்டன் கம்பனி அனுமதி எதனையும் பெறவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பார்டன் கம்பனி, தனது மேற்படி பை உற்பத்திகள் அனைத்தையும் வாபஸ் பெற்று அழிப்பதாக கூறியுள்ளது.
மேற்படி பைகள் 2.60 ஸ்ரே லிங் பவுன் வீதம் றீயூனியனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மொடல் அழகியான கார்லா புரூணியின் நிர்வாண புகைப்படம் கடந்த ஏப்ரலில் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஏல விற்பனையில் 91,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையானது.
0 விமர்சனங்கள்:
Post a Comment