இன்று சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்:தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பில்லை
(லங்கா ஈ நியுஸ் டிச-16, 2008 பி..ப 02..20)
இனப்பிரச்சினை தொடர்பான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் இன்று மாலை (16) அமைச்சர் பேராசிரியார் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்த கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என லங்கா ஈநியூஸ் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் கேட்டபோது,
அவ்வாறான எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லையென்றும் இனப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து சிபார்சுகளைச் சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சிக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு முக்கியமாகத் தேவைப்படுகிறது.
ஆகவே இந்தக் கட்சியின் முழுமையான பங்களிப்பின் பின்னரே ஏனைய கட்சிகளை அழைப்பது குறித்து ஆலோசிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
0 விமர்சனங்கள்:
Post a Comment