தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களுக்கெதிராக தாக்கல் செய்த மனுவை குற்றத்தடுப்பு பிரிவினர் வாபஸ் பெற்றனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவினர்; தாக்கல் செய்திருந்த மனு இன்று வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் மூவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்ற தடை உத்தரவொன்றை நீதிமன்றம் விதிக்க வேண்டுமென குற்றத் தடுப்புப் பொலிசார் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகவிருந்த போது இவர்கள் மூவருக்கும் எதிராக தம்மால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment