அம்பகாமத்துக்குள் படைகள் நுழைந்தன என அறிவிப்பு
வன்னியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் திங்கட்கிழமை காலை அம்பகாமத்திற்குள் நுழைந்துள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவுப் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் ஒலுமடுவிற்கு வடக்கே உள்ள அம்பகாமத்திற்குள் - விடுதலைப் புலிகளுடன் கடும் மோதலின் பின்னர் - நுழைந்துள்ளனர் என்று கூறப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒலுமடுவிற்கு ஏழு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்பகாமம், விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக மையமாகத் திகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இங்கிருந்தே விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு மோதலை நெறிப்படுத்தி வந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment