வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த காதலனை விபரீதமான முறையில் பழிவாங்கிய பெண் மருத்துவர்
தலைமறைவான காதலியை தேடி இந்திய பொலிஸார் வலைவிரிப்பு
வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த காதலனை மிகவும் விபரீதமான முறையில் பழிவாங்கிய பெண் மருத்துவரைத் தேடி இந்தியப் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
பெங்களூரில் கோரமங்களாவில் பல் மருத்துவமனையொன்றை நடத்தி வரும் மேற்படி பெண் மருத்துவரான அமீனா (32 வயது), மீர் ஹர்ஸத் அலி என்ற இளைஞரை 8 வருடமாக காதலித்து வந்தார்.
ஹர்ஸத் அலியும் (33 வயது) ஒரு பல் மருத்துவர் ஆவார். அவர் மைசூரில் சொந்தமாக மருத்துவமனையை நடத்தி வந்தார்.
ஹர்ஸத் அலிக்கும் அமீனாவுக்குமிடையே கல் லூரி காலத்தில் மொட்டு விட்டு பூவாக மலர்ந்த காதல், பழமாக கனிய வேண்டிய நேரத்தில் கருக ஆரம்பித்தது.
அண்மைக் காலமாக ஹர்ஸத் அலிக்கும் அமீனாவுக்குமிடையே கருத்து பேதம் ஏற்பட்டது.
ஹர்ஸத் அலி அமீனாவிடமிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஆரம்பித்தார்.
வெறும் ஊடல், விரைவில் சரியாகி விடும் என அமீனா அலட்சியமாக இருந்தார்.
ஆனால், கடந்த மாதம் ஹர்ஸத் அலி வேறொரு பெண்ணைத் திடீரென திருமணம் செய்து கொள்ளவும் அமீனாவுக்கு பெரும் அதிர்ச்சி.
ஹர்ஸத் அலி, பழைய காதலியை முற்றாக மறந்து விட்டு புது மனைவியுடன் உல்லாசமாக குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.
அமீனாவுக்கு அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை. தனக்கு கிடைக்காதவர் வேறொருத்தியுடன் இன்பமாக வாழ அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த அவர், அடுத்து எந்தக் காதலியும் செய்யத் துணியாத அதிரடி நடவடிக்கையில் களம் இறங்கினார்.
மைசூரிலிருந்த ஹர்ஸத் அலியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமீனா, அவரை உடனடியாக பெங்களூருக்கு வரும்படி தந்திரமாக அழைப்பு விடுத்தார்.
என்ன இருந்தாலும் 8 வருட காலம் உயிருக்குயிராக நேசித்த காதலியல்லவா? அமீனாவின் அழைப்பை நிராகரிக்க ஹர்ஸத் அலிக்கு மனம் வரவில்லை.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி ஹர்ஸத் அலி, பெங்களூர் வந்து அமீனாவின் பல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்து உரையாடினார்.
இதன்போது தனது காதலி கொடுத்த பழப்பானத்தை எதுவித சந்தேகமும் இன்றி ஹர்ஸத் அலி அருந்தினார்.
மயக்க மருந்து கலந்த அந்தப் பழப்பானம் தனது கைங்கர்யத்தைக் காட்டவும், அவர் மயங்கி விழுந்தார்.
அந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்த அமீனா, கூர்மையான கத்தியை எடுத்து காய்கறி அரிவது போன்று ஹர்ஸத்தின் மர்ம உறுப்பை "நறுக்' என வெட்டித் தள்ளினார்.
ஹர்ஸத் அலியின் மர்ம உறுப்பு வெட்டப்பட்ட இடத்திலிருந்து அளவு கடந்த குருதி பெருக்கெடுத்து ஓடவும், அமீனாவுக்கு பயம் ஏற்பட்டது.
உடனே அவர் அவசர அவசரமாக தனது காரில் ஹர்ஸத் அலியை ஏற்றிச் சென்று அப்பலோ மருத்துவமனையில் அனுமதித்து விட்டு தலைமறைவானார்.
அப்பலோ மருத்துவமனை மருத்துவர்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல் பறந்தது.
மயக்க நிலையிலிருந்த ஹர்ஸத் அலிக்கு உண்மையில் என்ன நடந்தது, எதனால் அவரது மர்ம உறுப்பு நீக்கப்பட்டது என்பது குறித்து முதலில் எவருக்கும் எதுவுமே புரியவில்லை.
மருத்துவ சிகிச்சையின் பின் ஹர்ஸத் அலி, விழித்து வாக்குமூலம் அளித்த பிற்பாடே, மிகவும் மோசமான பழிவாங்கல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் தெரிந்து கொண்டனர். அவர்கள் தலைமறைவாகியுள்ள பெண் மருத்துவர் அமீனாவை கண்டுபிடிக்க மும்முர தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் உடல்நலம் தேறி வரும் ஹர்ஸத் அலி, தனது மர்ம உறுப்பு பறிபோன சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment