பிறந்தநாளன்று அநாதையான குழந்தை
Rivkah Holtzberg holds her son Moshe (center)
மும்பை, நரிமன் ஹவுஸ் தாக்குதலில் பலியான யூத தம்பதியினரின் 2 வயது குழந்தை, உயிருடன் மீட்கப்பட்டது. தனது பிறந்த நாளான நவம்பர் 28ஆம் திகதியன்றே இக்குழந்தை பெற்றோர் இருவரையும் இழந்துள்ளது.
Two-year-old Moshe
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நரிமன் ஹவுஸ் கட்டிடத்தில் யூத மதத்தை சேர்ந்த பல குடும்பங்கள் தங்கி இருந்தன. இஸ்ரேல் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட யூதர்கள் மீது நீண்ட கால பகைமை உணர்வு கொண்ட தீவிரவாதிகள் நரிமன் ஹவுஸ் கட்டிடத்தை குறி வைத்து தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் அமெரிக்க குடியுரிமை பெற்ற ரப்பி என்ற யூதர் தனது மனைவியுடன் பலியானார்.
Rabbi Gavriel and Rivkah Holtzberg were killed in one of the worst terrorist attacks in Indian history
ரப்பி தம்பதியினர் மும்பையில் தங்கியுள்ள யூதர்களுக்கு சேவை செய்வதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தனர். ரப்பி தம்பதியினர் உட்பட தாக்குதலில் பலியானவர்களுக்காக, மும்பையில் உள்ள யூத மத வழிபாட்டு தலம் ஒன்றில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, குழந்தை மோஷியும் அழைத்து வரப்பட்டு இருந்தது.
பளிச்சென்ற பச்சை நிற சட்டை, நீல நிற கால்சட்டை அணிந்திருந்த குழந்தை மோஷி, கையில் பந்து ஒன்றை வைத்திருந்தது. கடந்த சில நாட்களாக தனது பெற்றோரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சுற்றுமுற்றும் மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்த மோஷியின் பரிதாப நிலை அங்கு வந்திருந்தவர்களின் விழிகளில் கண்ணீரை வரவழைத்தது.
மோஷியின் பெற்றோர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு விரைந்து வந்த ரப்பியின் மனைவியின் பெற்றோரிடம் மோஷி ஒப்படைக்கப்பட்டான்.
தீவிரவாதிகளின் தாக்குதலின்போது மோஷி மீட்கப்பட்டது எப்படி என்பது பற்றி ரப்பியின் வீட்டு பணிப்பெண் சாண்ட்ரா சாமுவேல் வெளியிட்ட தகவல்கள் இஸ்ரேல் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அந்த பேட்டியில் சாண்ட்ரா கூறி இருப்பதாவது: குழந்தை மோஷி, 2ஆவது மாடியில் இருந்து இருக்கிறான்.
Sandra Samuel escaping from the Mumbai Chabad House with 2-year-old Moshe'le Holtzberg in her arms
அவன் 5ஆவது மாடியில் தூங்கிக்கொண்டிருப்பதாகத்தான் முதலில் நினைத்து இருந்தோம். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்புவதற்காக ஒரு அறையின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே மறைந்து இருந்தேன்.
மோஷி, இடைவிடாமல் எனது பெயரைக்கூறி அழைத்துக்கொண்டு இருந்த சத்தம் எனது காதில் விழுந்ததும் கதவை திறந்து கொண்டு 2வது மாடிக்கு விரைந்து சென்று அவனை தூக்கிக்கொண்டு ஓடிவந்தேன். அப்போது உள்ளே புகுந்த கொமாண்டோ படைவீரர்கள் எங்களை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.
இவ்வாறு சாண்ட்ரா கூறினார்.
குழந்தை மோஷியின் பெற்றோர் இல்லாததால், பணிப்பெண் சாண்ட்ராவை மட்டுமே அந்த குழந்தைக்கு அடையாளம் தெரிகிறது. அதனால், இந்தியாவை சேர்ந்த சாண்ட்ராவுக்கு இஸ்ரேல் நாட்டு குடியுரிமை அளித்து அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment