ஆசிரியர்களால் தாக்கப்பட்டு இறந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
சேலம் அருகே, பாடசாலையொன்றில் ஆசிரியர்களால் தாக்கப்பட்டு இறந்த மாணவன் ஒருவனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு பெற்றோர் நேற்று முன்தினம் தீர்மானித்துள்னர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழும் கீதா என்பவரின் மகனான நாஞ்சில் வளவன் (வயது 8) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மூன்றாம் வகுப்பு படித்து வந்த மேற்படி மாணவனை பாடசாலைக்கு வரைபடம் கொண்டு வராததால் மாடி வகுப்பில் வைத்து 3 ஆசி?யர்கள் சேர்ந்து கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர். அடியின் வலி தாங்கொனாமல் மாணவன் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால் மாணவனின் மூளை முற்றாக பாதிக்கப்பட்டது.
இதனால் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் நாஞ்சில் வளவனின் மூளை செயலற்று போய் விட்டதாக தெரிவித்து இனி அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
அதனால், நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரின் குடும்பத்தார் முடிவு செய்தனர். இதனையடுத்து சிறுவன் நாஞ்சில் வளவனின் உடலை உறவினர்கள், நேற்று முன்தினம் மாலை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தாய் கீதா, என் மகனின் உடல் உறுப்பு, வேறொரு உயிரில் பொருத்தப்பட்டு வாழ்பவர்களை நான் என் மகனாக கருதிக்கொள்கிறேன். என்னுடைய மகனின் இதயம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கி முடிப்பதற்குள் மகனின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான ஆசிரியர்களைக் கைது செய்வதன் மூலம் இனி இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என கண்ணீர் மல்கக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment