மாண்டுபோன மனைவிக்காக காரில் வாழும் மாமனிதர்
மாமனிதர் Ngah Muhamad
MC456, Volvo Car, Kampung Alor Teratai, Kuala Besut இதுதான் இவரது உத்தியோகபூர்வமற்ற முகவரி
தனது நான்காவது மனைவியின் ஞாபகார்த்தமாக கடந்த 6 வருடங்களாக காரொன்றில் நபர் ஒருவர் வாழும் விசித்திர சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் சுங்கவரித் திணைக்கள உத்தியோகத்தரான நஹாஹ் முஹமட் (86 வயது) என்ற இந்த நபர், குவாலா பெசுட் எனும் இடத்திலுள்ள அலோர் தெராதாய் பள்ளிவாசலின் கார் தரிப்பிடத்தில் வீடாகப் பயன்படுத்தும் மேற்படி காரை நிறுத்தியுள்ளார்.
1975 ஆம் ஆண்டு 16000 மலேசிய ரிங்கித்துக்கு வாங்கிய காரையே அவர் இவ்வாறு வீடாக மாற்றியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு அவரது நான்காவது மனைவி இறந்ததையடுத்து, அம்மனைவியால் பெரிதும் நேசிக்கப்பட்ட மேற்படி வொல்வோ காரை தனது வீடாக மாற்ற அவர் தீர்மானித்தார்.
காரின் பின் பக்கத்தை தனது உடைமைகளுக்கான இருப்பிடமாக மாற்றியுள்ள முஹமட், காரின் முன்பக்கத்தை தனது படுக்கையறையாகவும் ஓய்விடமாகவும் சாப்பாட்டறையாகவும் பயன்படுத்துகிறார்.
1937 ஆம் ஆண்டு 37 மலேசிய ரிங்கித் சம்பளத்தில் அரச சேவையில் இணைந்து கொண்ட அவர், பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.
கடைசிக் காலத்தில் வசதியாக வீட்டில் வாழாமல் கா?ல் சிரமத்தின் மத்தியில் வாழ்வது குறித்து முஹமட்டிடம் வினவப்பட்டபோது, அன்புக்குரிய ஒருவரை இழக்கும்போது ஏற்படும் பாதிப்பை, அதை அனுபவித்த ஒருவரால் மட்டுமே உணர முடியும். இந்த காரில் எனது மனைவியுடன் கழித்த சந்தோஷமான காலங் களை இக்காரில் தங்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு ஞாகமூட்டுவதாக உள்ளது. இளம் வயதிலேயே அநாதை வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது. அதனால், இந்த வயதில் தனிமையில் வாழ்வதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
எனது பிள்ளைகளுக்கு கஷ்டம் கொடுப் பதை நான் விரும்பவில்லை. அவர்களுக்கென சொந்த வாழ்க்கை இருக்கிறது'' என்று அவர் கூறினார்.
தினசரி தொழுகைக் கடமைகளை நிறைவேற்றவே காரை பள்ளிவாசலின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment