கொண்டலீஸாவின் புதிய கண்டுபிடிப்பு
மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அதிகரிப்பு - கொண்டலீஸா ரைஸ் கவலை
இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீஸா ரைஸ் கவலை தெரிவித்துள்ளார்.
நியூ˜யார்க்கில் நடைபெற்ற மனித உரிமை பண்பாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் போரில் ஈடுபடும் தரப்பினரான ஸ்ரீலங்கா அரசு, துணை இராணுவக் குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகள் போன்றோர் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன. இது கவலையளிப்பதாகும்." - என்று அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கல் டி ரார் இலங்கை அரசுடன் இணைந்து மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றியிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முதன்மையான பங்கு வகித்திருந்தது. துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களைக் களைவதிலும் அமெரிக்கா அக்கறை காட்டியிருந்தது என்றார் அவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment