சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் படையினரால் நாசம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மு.சிவாஐிலிங்கம் அவர்களின் பருத்தித்துறையில் இருந்த அலுவலகம் நேற்று முன் தினம் இரவு சிறிலங்காப் படையினரால் உடைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தை உடைத்த படையினர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் படையினர் சூறையாடியுள்ளனர்.
இந்தியாவில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை அங்குள்ள மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வரும் நிலையில், கடும் ஆத்திரமடைந்துள்ள சிறிலங்கா அவரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இந்தியா அவரை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக செய்திகளும் பரப்பபட்டன. ஆனால், அவ்வாறான உத்தரவுகள் எதுவும் தனக்கு இந்திய உயர் மட்டத்தில் இருந்து வரவில்லை என சிவாஜிலிங்கம் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment