கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்
கனடாவின் ரொரன்டோ நகரைச் சேர்ந்த லீ ருங் (Le Trung) என்ற மென்பொருள் பொறியியலாளர், தனக்கென அச்சு அசலாக ஒரு பெண் போன்று செயற்படும் ரோபோ காதலியை உருவாக்கியுள்ளார்.
அகியோ என்ற இந்த ரோபோவானது வீட்டைச் சுத்தம் செய்வது, பத்திரிகை தலைப்புகளை வாசித்துக் காட்டுவது என்பன போன்ற வீட்டு வேலைகளை மட்டுமல்லாது, தொடும் போது ஒரு அசல் பெண்ணைப் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுக ளைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"அகியோ' என்றால் ஜப்பானிய மொழியில் அன்பான குழந்தை என்று பொருள்படும் எனத் தெரிவித்த லீ ருங் (Le Trung) (33 வயது), மேற்படி ரோபோவை தனது பாலியல் தேவைக்காக உருவாக்கவில்லை என்று கூறினார்.
நிஜத்தில் தனக்குப் பொருத்தமான மனிதக் காதலியை தேடிக்கொள்ள முடியாமை காரண மாக இந்த ரோபோவை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கியதாக தெரிவித்த லீ ருங் (Le Trung), இந்த பெண் ரோபோவை உருவாக்குவதற்கு சுமார் 21,000 அமெரிக்க டொலரைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிக்கு தேவையான பணப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தனது காரொன்றை விற்க நேர்ந்ததாக அவர் கூறினார்.
எதிர்வரும் சில வருடங்களில் தனது ரோபோ காதலியை நிஜப் பெண்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மென்மேலும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தான் மாரடைப்பால் துன்பப்பட்டு வருவதாகவும் தனக்கு 24 மணித்தியால கவனிப்பு தேவைப்படும் நாள் தொலைவிலில்லை எனவும் தெரிவித்த லீ தருங், அச்சமயத்தில் மனிதக் காதலியை விட இந்த ரோபோ காதலி தனக்கு உறுதுணையாக இருப்பாள் என நம்புவதாக கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment