சிவாஜிலிங்கம் எம்.பி.க்கு ஆபத்து நேர்ந்தால் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பேற்க வேண்டும்
இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.
நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகத் தலைவர்களை விமர்சித்து இலங்கை இராணுவத் தளபதி பேசிய கேலிப் பேச்சுக்கு கண்டனம் தெ?வித்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அருகே ம.தி.மு.க. கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைத் தளபதி சரத் பொன்சேகா பேசியிருப்பது தமிழகத்தில் உள்ள தலைவர்களையும், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள தலைவர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதற்கு இந்திய அரசு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடும் கண்டனத்தை தெ?விக்க வேண்டும்.
இந்தியாவில் ஈழப் படுகொலை குறித்த பரப்புரையில் ஈடுபடுவதால் சிவாஜிலிங்கம் எம்.பி.யை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், அவர் இந்தியாவிலிருந்து இலங்ககைக்குச் சென்ற அடுத்த நிமிடமே அவரது உயிர் பறிக்கப்படும் என்பதால் அவர், தாய் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவர் இலங்கைக்குச் சென்றவுடன் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் நெடுமாறன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment