15வயது மாணவனை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய 36வயதான பெண் கைது
இளம் வயது பாடசாலை மாணவன் ஒருவனை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக தனது பாலியல் இச்சையை தீர்க்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பெண்ணை அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவை நீதிமன்ற நீதிபதி சிறிநித் விஜேசேகர இம்மாதம் 26ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கெக்கிராவையைச் சேர்ந்த 36வயதான திருமணமானவரான எச்.எஸ்.ரஞ்சனி என்னும் பெண்ணாவார்.
சந்தேகநபரான பெண்ணின் மகனுடைய பாடசாலை நண்பனான 15வயதுடைய சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனை அடிக்கடி நண்பனுடன் அவனது வீட்டிற்கு சென்றதுடன் இரவு வேளையிலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து படித்து விட்டு அவ்வீட்டில் உறங்குவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளான். இதன்போதே குறித்த பெண் இவ்விளம் வயது மாணவனை தனது பாலியல் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலை தொடர மாணவன் தன்னை அறியாமலேயே இப்பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ளப் பழகியுள்ளான் என கெக்கிராவை பொலீசார் நீதிமன்றில் விளக்கமளித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவனை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதனை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கெக்கிராவை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில அபேநாயக்கவின் ஆலோசனைக்கிணங்க கெக்கிராவை பொலீஸ்நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலீஸ்குழு இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment