பிரபாகரன் இந்தியாவின் ஊடாக மூன்றாம் உலக நாடென்றுக்குச் செல்லலாம் -இந்திய பொலிஸ் ஆணையாளர் தகவல்
தரை, கடல் வழிப் பாதுகாப்புத் தீவிரம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியா ஊடாக மூன்றாம் உலக நாடொன்றுக்குத் செலல்லாமென்பதன் காரணமாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய பொலிஸ் ஆணையாளர் கே.பி. ஜெயின் தெரிவிக்கையில்: பிரபாகரன் இந்தியா ஊடாக மூன்றாம் உலக நாடொன்றுக்குச் செல்ல முயற்சிக்கலாம். இதனைக் கருத்தில் கெண்டு நாம் எமது கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம்.
சென்னையில் நடைபெற்ற பாதுகாப்பு உயர்மட் மகாநாட்டில் இது குறித்து மேலும் தெரிவித்த பொலிஸ் ஆணையாளர் ஜெயின்: முக்கிய பாதைகள் மற்றும் கடல்வழி மர்க்கங்கள் போன்றவற்றில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடபகுதியில் நடப்பது என்னவென்பது எமக்குத் தெரியும். அதற்கேற்ப எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் கிடைக்கும் போது அவை அனைத்துப் பாதுகாப்புத் தரப்புக்கும் தெரிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லங்கா ஈ நியூஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment