இலங்கைக்கு அரசியல் தீர்வு தேவை: 16வது ஆசீர்வாதப்பர்
இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வொன்று தேவைப்படுவதாக பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்கள் தீர்க்கமான நிலையை அடைந்திருக்கும் நிலையிலேயே பாப்பரசர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வத்திக்கானுடன் இணைந்து செயற்படும் 178 நாடுகளின் பிரதிநிதிகளுடனான வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் ஆசிய நாடுகள், அப்கனிஸ்தான், கம்போடியா, சீனா, லாவோஸ், மலேசியா, மியன்மார், வடகொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அத்துடன் ரஷ்யாவின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் நாடுகள் சமாதானத்தை அடைவதாயின், வறுமையை ஒழிப்பது, உணவுத் தட்டுப்பாட்டினை நிவர்த்திசெய்வது, பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுப்பது போன்றவை தொடர்பான திட்டங்கள் குறித்து அரசாங்கங்கள் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் பாப்பரசர் மேலும் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment