ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தியபைபிளை வைத்தே ஒபாமா பதவியேற்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை வைத்தே பராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார்
ஆப்ரகாம் லிங்கன் அதிபராகப் பதவியேற் றுக் கொண்ட பின்னர் எவ்வித மதிய உணவு சாப்பிட்டாரோ அதேபோல தானும் சாப் பிட ஒபாமா முடிவெடுத்துள்ளார்
ஆப்ரகாம் லிங்கனின் வழியை பின்பற்றி வருபவர் பராக் ஒபாமா. இதனால் அவரது வழியிலேயே தானும் பதவியேற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளார்
அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள ஒபாமா வரும் 20-ம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்
பதவியேற்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்
விருந்து நிகழ்ச்சி: பதவியேற்றுக் கொண்ட பின்னர் ஒபாமா தனது மதிய உணவை நாடாளுமன்ற குழுவினருடன் சேர்ந்து சாப்பிட உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக் காவின் துணை அதிபர், அவரது குடும்பத்தார், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள் பட 200-க்கும் மேலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள வுள்ளனர்
இந்நிலையில் ஒபாமா தனது குடும்பத்தாருடன் ஆப்ரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அஞ்சலி செலுத்தினார்
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னை கவர்ந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் என்று பெருமி தத்துடன் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment