ஈழத்தில் தமிழர்களாய்பிறப்பது பாவமா?
ஈழத்தில் தமி ழர்களாய் பிறப்பது பாவமா என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பினார்
கோவை அருகே இடையர் பாளையத்தில் ஞாயிற்றுக்கி ழமை பன்னாட்டு அரிமா சங் கங்கள் சார்பில் நடந்த மண் டல மாநாட்டில் அவர் பேசிய தாவது: நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன
சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம்
விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயு தம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால், போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதா கக் கூறி மறைமுகமாக இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளையும், நிதி உதவியை யும் அளித்து ஊக்குவித்து வருகிறது
தமிழர்களின் பண்பாடு அழியாமல் இருக்குமா னால் அது ஈழத் தமிழர்களால்தான். ஆனால், அவர்கள் போரில் கொல்லப்பட்டு அவர்களின் ஆடைகளை களைந்து சிங்கள ராணுவத்தினர் சித் ரவதை செய்கின்றனர்
ஈழத்தில் தமிழர்களாக பிறப்பது பாவமா? இதற்கு இந்தியாவில் வாழும் தமிழ் உணர்வு உள்ள தமிழர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார் அவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment