இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சி: ஏழு பேர் சிக்கினர்
இலங்கைக்கு படகில் தப்பிச் செல்ல முயன்ற அகதிகளை போலீசார் பிடித்தனர். இலங்கையில் நடந்து வரும் சண்டையில் ராணுவத்தின் கை ஓங்கியுள்ள நிலையில், உயிருக்கு பயந்து அப்பாவித் தமிழர்கள் பலர் அகதிகளாக வருகின்றனர். இந்நிலையில், 2007ல் அகதியாக வந்து பழனி, சிவகிரிப்பட்டி மற்றும் கரூர் முகாமில் தங்கியிருந்த வவுனியாவைச் சேர்ந்த குமுதமலர்(22), ஜீவகந்தன்(38), ரேணுகா(33) மற்றும் இவர்களது குழந்தைகள் உட்பட 12 பேர் இலங்கை செல்ல, நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தனர். அங்குள்ள லாட்ஜில் தங்கிய இவர்கள், இரவில் தங்கச்சி மடம் வடக்கு பகுதி மாந்தோப்பு கடற்கரையில் படகுக்காக காத்திருந்தனர். அப்போது, ரோந்து சென்ற போலீசாரிடம் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் சிக்கினர். தப்பிய ஏஜென்ட் சுதன், அகதி சுதர்சன் உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் தங்கச்சி மடம் போலீசார் மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். அகதிகள் கூறுகையில், "இங்கு தொழில் வாய்ப்பு இல்லாததால் இலங்கைக்கு செல்ல முடிவு செய்தோம். மதுரையில் தங்கியுள்ள அகதி சுதன்(ஏஜென்ட்) படகில் அனுப்பி வைப்பதாகக் கூறியதால், படகு கட்டணமாக இருந்த நகைகளை விற்றுக் கொடுத்தோம்' என்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment