யாழ். மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு
யாழ்ப்பாணத்திலுள்ள பிரமுகர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் சமயப்பெரியார்கள் உள்ளிட்ட பெருமளவு பொதுமக்கள் நேற்றையதினம் (11.01.2009) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துள்ளனர்.
நேற்று முற்பகல் சமூகசேவைகள் அமைச்சரின் யாழ். பணிமனை மாநாட்டு மண்டபம் நிறைந்த நிலையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்டதோர் விளக்க உரையினை அவர்களுக்கு தெளிவுபடுத்தி உரையாற்றினார்.
சமூகசேவைகள் அமைச்சரின் பணிமனை மாநாட்டு மண்டபம் நிறைந்நிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரைவில் ஏ9 வீதி திறக்கப்படவுள்ள நிலையிலும் பல வெளிநாடுகள் உதவிகள் வழங்குவதற்கு தயாராக உள்ள நிலைமையிலும் வளமானதோர் எதிர்காலம் தென்படுகின்றது. இந்நிலையில் ஜனநாயக சூழ்நிலைமையினை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அத்துடன் எவர் தவறு செய்தாலும் அதனைத் தட்டிக்கேட்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார்.
இதன்பின்னர் பொதுமக்கள் பலரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தமது அபிப்பிராயங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் அவரின் மக்கள் நலப்பணிகளுக்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் தமது பூரண ஆதரவினை இன்றுதிரண்ட பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளமை விஷேட அம்சமாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment