பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பிரஜைகளின் விபரங்களும் பதியப்பட வேண்டும்
நாட்டின் அனைத்து பிரஜைகளையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து பிரஜைகளும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ரீதியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கானவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலகுவாக மேற்கொள்வதன் பொருட்டு வீட்டிலிருந்தவாறே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அறிவி;க்கப்பட்டுள்ளது.
அத்துடன் www.citizens.lk என்ற இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment