பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் கடற்படை 24 மணிநேர தீவிர கண்காணிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என்பதன் காரணமாக இலங்கைக் கடற்படையினர் கடற்பிரதேச ரோந்து, கண்காணிப்புப் பணிகளை அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி இன்று வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவில் பங்கர் ஒன்றுக்குள் பிரபாகரன் மறைந்துள்ளதாகவும் இலங்கை இராணுவத்தின் 55,53,58,57,59 மற்றும்; படையணி-3 படையணி-4ஆகியன தற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச் செல்வதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, பிரபாகரனோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களோ கடல் வழியாகத் தப்பிச் செல்வதனைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் உசார் படுத்தப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி.கே.பி தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்குப் பேட்டி வழங்கியிருந்த விமானப்படைப் பேச்சாளர் மேலும் தகவல் தெரிவிக்கையில்: கடற்படைக்குச் சொந்தமான தாக்குதல் நடத்தும் படகுகள், வேகப் படகுகள்,ராடர்கள் அனைத்தும் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment