ஏ-9 பாதை திறப்பு மூலம் யாழ். குடா மக்கள் புத்துயிர் பெறுகின்றனர் யாழ் ஆயர் செளந்தரநாயகம்
ஏ-9 பாதை திறக்கப்பட்டது குறித்து தான் பெரு மகிழ்ச்சியடைவதாக யாழ். ஆயர் வண. தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறப்பானது வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் மிகவும் புரிந்துணர்வை ஏற்படுத்துமெனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ஏ-9 பாதை மூடப்பட்டிருந்ததன் மூலம் யாழ். குடாநாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தார்கள். பாதை திறக்கப்பட்டு விட்டதென்ற செய்தி கேட்டதும் பெருமகிழ்ச்சியடைந்தேன்.
குடாநாட்டில் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு போக்குவரத்து பிரதான காரணமாக அமைந்தது. பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் யாழ். மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment