ஆனையிறவு: 1970-2009
1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இராணுவத்தினர் வசமிருந்த ஆனையிறவை கைப்பற்றுவதற்கு 1991ஆம் ஆண்டு முதலாவது மோதல் விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு ஜுலை 10ஆம் திகதி இரு தரப்புக்குமிடையில் கடுமையான மோதல்கள் நடைபெற்றதுடன், வெற்றிலைக்கேணியில் தரையிறக்கமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்திருந்தனர்.
இதன் பின்னர் சில தடவைகள் ஆனையிறவை கைப்பற்ற விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவரை இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்றும் தாக்குதலொன்றை விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தனர்.
இரு தரப்புக்குமிடையில் நடந்த கடும் மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றியிருந்தனர். இந்த வெற்றியானது விடுதலைப் புலிகளுக்குப் பாரியதொரு வெற்றியென அப்போது கூறப்பட்டது. 2403 இராணுவத்தினர் கொல்லப்பட்ட மோதல் பாதுகாப்புத் தரப்பினருக்குப் ஒரு பின்னடைவு எனக் கூறப்பட்டது.
ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதன் தொடர்ச்சியாகவே 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி இராணுவத்தினர் மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்றியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment