புலிகளின் மேலும் ஒரு விமான ஓடுபாதை இன்று கண்டுபிடிப்பு
முல்லைத்தீவில் இருந்து பத்து கிலோ மீற்றர் மேற்கில் புலிகளின் நான்காவது "விமான ஓடு பாதை கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது:
இந்த ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைப்பதற்காகன ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரு இடத்தில் விமானக் கட்டுப்பாட்டு அமைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதிகளில் பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால் இராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர்.
வீரகேசரி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment