23 வருடங்களின் பின் வடக்கும் தெற்கும் இணைவு
A9 பாதை திறப்பு
(ஸாதிக் ஷிஹான்)
ஏ-9 பிரதான வீதி முழுவதும் 23 வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு கண்டி, யாழ்ப் பாணம் ஏ-9 பிரதான வீதி முழுவதும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனை முப் படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ நேற்று நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
ஓமந்தை தொடக்கம் முகமாலை வரையான ஏ-9 பிர தான வீதி இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட் டில் இருந்த போதும் 23 வருடங்களுக்கு பிறகு படை யினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையின ருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரி வித்தார்.
ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரை யிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்க ளிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம் பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன் பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் கைப்பற்றினர். அங்கிருந்து முன் னேறிய படையினர் நேற்று இயக்கச்சி யையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெ டுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமை ஏ-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.
1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம் களை அமைத்தமை புலிகளுக்கு தமது பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடு க்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது.
ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
ஆணையிறவிலுள்ள தமது நிலைகளை யும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படை யினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையி னரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையா ற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று மீண்டும் மீட்டெடுக்கப்ப ட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏ-9 பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்ப வர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகன ங்களில் செல்பவர்களிடம் வரி அற விட்டனர். சொந்த பாவனைக்காக பொரு ட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது.
வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரண மாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.
ஏ-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். - கொழும்பு சென்றவர்கள் இனி ஏ-9 பாதையூடாக செல்லும் வாய்ப்பை படை யினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என் றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட் டினார்.
பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
ஆனையிறவு விடுவிக்கப்பட்டு, ஏ-9 வீதி திறக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ நேற்று நாட்டுக்கு உத்தி யோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளி யாகும் என்ற செய்தி பரவியதும் அந்த நல்ல செய்தியை எதிர்பார்த்திருந்த மக்கள் அறிவிப்பு வெளியானதும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர்.
தினகரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment