யாழ். குடா மக்கள் நிம்மதி பெருமூச்சு:
போக்குவரத்து தடையும் நீங்கியது
(மர்லின் மரிக்கார், பீ. வீரசிங்கம்)
யாழ்ப்பாணத்திற்கான தரை வழிப்பாதை திறக்கப்ப ட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடும் நிலை உருவாகியிருக்கிறது.
அதேவேளை, யாழ். உற்பத்திப் பொருட்கள், தென் பகுதிக்கும், தென் பகுதி உற்பத்திப் பொருட்கள் யாழ்ப் பாணத்திற்கும் கொண்டு செல் வதற்கு நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென அரசியல் பிரமுகர்களும் புத்தி ஜீவிகளும் கல்விமா ன்களும் கருத்துத் தெரிவித் துள்ளனர்.
ஏ-9 வீதி திறக்கப்பட்டிருப்பதன் மூலம், மக்கள் சுதந் திரமாக பயணம் செய்வதற்கு வழி கிடைத்திருக்கிறது. அதே நேரம் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையில் நட்புறவு ஏற்படவும் வழியேற்பட்டுள்ளதெனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)
இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தி ருந்தார்கள். இப்பாதை திறக் கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற் றிருக்கிறது. இனிமேல் தரை வழியாக யாழ்ப்பாணத் திற்கு சென்று வர போக் குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடி யதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட் டது. புலிகள் இயக்கத்தினரின் இந்நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.
புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகை கள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறி கள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட் களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள் ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக் கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே ஏ- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர்.
இப்பாதை திறக்கப்பட்டி ருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளா தாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலை கள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழி யாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என் பதில் ஐயமில்லை.
நீர்வை பொன்னையன்
(பிரபல எழுத்தாளர்)
ஏ - 9 பாதை திறப்பது யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்தை இலகுவாக்கும். இப்போது கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடை யிலான போக்குவரத்துக்குப் பெருமளவு பணம் தேவை ப்படும் நிலையில் ஏ 9 பாதையைத் திறப்பது வறிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
யுத்தநிறுத்த காலத்தில் இப்பாதையால் பிரயாணம் செய் பவர்கள் வரிசெலுத்த வேண்டியிருந்தது. சொந்தப் பாவ னைக்குப் பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் வரி செலுத்தினார்கள். அத்தகைய சிரமங்கள் இல்லாமல் மக் கள் போக்குவரத்து செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாண விவசாயிகள் இதனால் பெரிதும் நன்மை அடைவர். அவர்களின் விளைபொருட்கள் இனிமேல் கொழு ம்புச் சந்தைக்கு வரமுடியும்.
புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்
ஏ-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமான த்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபா வுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது.
அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது.
இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புட னும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர் பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப் பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளை பொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலை களும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டா ர்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.
இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரம ங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
திருநாவுக்கரசு சிறிதரன்
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)
ஏ - 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினரா லும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமா கும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கை கள் ஏ - 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.
பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்க ப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண் டும். ஏ - 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறை வதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவி த்த துன்பங்களை வார்த்தைக ளால் விபரிக்க முடியாது. சாதா ரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ஏ - 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இன ங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.
பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
சர்வதேச இந்துமத பீடம்
ஏ - 9 பாதை திறக்கப்பட் டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழி படுவதற்கான வாய்ப்புக் களும் இலகுவாகிவிடும்.
இப்பாதை மூடப்பட் டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களு க்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித் தம் கொழும்புக்கு வருகின் றார்கள். இப் பாதை திறக் கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய் ப்பு கிடைக்கப் பெற்றிருப் பதுடன், பொன்னான கால மும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதார த்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகை யில் இப்பாதை திறக்கப்பட் டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரி ந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத் திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப் பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக் கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந் தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப் பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநா ட்டு மக்களுமே சந்தோஷம டைவார்கள் என்பதில் ஐயமி ல்லை.
எஸ். குமார ராஜன் முகாமையாளர்
தனியார் நிறுவனம்
இது பெரிதும் வரவேற்கத் தக்க விடயம். இப்பாதை 2006ம் ஆண்டில் தான் இழு த்து மூடப்பட்டது. இதன் காரணத்தினால் நாம் யாழ். குடாநாட்டுக்குச் சென்று வரப் பலவிதமான அசெளகரியங்க ளுக்கு முகம்கொடுத்து வந் தோம். ஒன்றில் விமானம் மூலமோ அல்லது கடல் வழியாக கப்பல் மூலமோ தான் சென்று வர வேண்டி இருந்தது. இது அதிக செலவு மிக்க பயணம். ஒரு முறைக்கு விமானம் மூலம் யாழ். குடாநாட்டுக்குச் சென்று வர இருபதினாயிரத்துக்குu மேல் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இப்பாதை மூடப்பட்டதால் இற்றைவரையும் எனது உறவினர்களைப் பார்வையிட நான் அங்கு செல்லவி ல்லை.
இப்பாதை திறக்கப்பட்டிருப்பதை நாம் பெரிதும் வர வேற்கிறோம். இதன் பின்னர் சிரமங்களின்றி யாழ். குடாநாட்டுக்குச் சென்று வரலாம் என நம்புகிறோம்.
இப்பாதை திறக்கப்பட வேண்டும். நாட்டில் சாந்தி, சமாதானம் மீண்டும் உதயமாக வேண்டும். அதுவே எம் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
வடக்கிலிருந்து வந்து கொழும்பில் தங்கியிருக்கும் திருமதி பத்மதேவி:
கடந்த ஆறு வருடங்களாக உடன் பிறப்புகளுடன் எதுவித தொடர்புகளும் இல்லாமல் இருந்த எமக்கு இச்செய்தி பெரிதும் மகிழ்ச்சியைத் தருகிறது.
யுத்தம் இல்லாமல் இருந் தால் நாடு எவ்வளவு அமை தியாக இருக்கும். அந்த நாள் எப்போது வரும் எனக் காத்திருக்கிறோம்.
கப்பல் மூலமாக பயணம் செய்த மக்கள் பல்வேறு அசெ ளகரியங்களுக்கு முகங் கொடுத்தார்கள். விமானத்தில் செல்வ தென்றால் பெருந்தொகைப் பணத்தை செலவிட வேண்டி யிருக்கிறது. கடந்த காலங்களில் தரைமார்க்கமாக சென்ற மக்கள் பாஸ் நடைமுறைகள், வரி வசூலிப்புக்களால் பெரிதும் கஷ்டப்பட்டனர். எதிர்காலத்தில் அவ்வாறான நிலை வரக்கூடாது. அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலைகள் குறைவதுடன் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடுகளும் ஏற்படாது மக்கள் எவ்வித பிரச்சினை களும் இன்றி வடக்கிற்கு சென்று வரக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
சிவஸ்ரீ பாலரவிசங்கரக் குருக்கள்:
ஏ - 9 வீதி திறக்கப்படுவதாக வெளியான செய்தியைக் கேட்டதும் மதகுருமார் சார்பில் எமது மகிழ்ச்சியை தெரி வித்துக் கொள்கிறோம். வடக்கு - கிழக்கு வாழ் மக்க ளுக்கு மட்டுமல்ல அனைத்துப் பகுதி மக்களுக்கும் நட்பு றவுக்கான வீதியாக ஏ - 9 கருதப்படுகிறது. மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான பிரதான மார்க்கமாக ஏ -9 காணப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரமல்லாமல் அனைத்து தரப்பினரும் அதன் பயனை அனுபவிக்க வேண்டும். போர்ச்சூழல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பகுதிகளில் இயல்பு வாழ்க் கையை ஏற்படுத்த வேண்டும். மீளக்குடியமர்த்தல், புனர் வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏ - 9 வீதி மிகவும் அத்தியாவசியமானதாகும்.
கடந்த காலங்களில் வீதித்தடைகள் காரணமாக நோயா ளிகள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர். உரிய நேரத்திற்கு சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பிரயாணிகள் அசெளகரி யங்களுக்குள்ளாகினர். கடந்தகால கசப்பான உணர்வுகள் இனியும் ஏற்படாத வண்ணம் சகல தரப்பினரும் மக்களின் இயல்பான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
சின்னத்துரை தனபாலா,
உப தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்
ஏ-9 பாதை திறக்கப்படுவதை நாம் பெரிதும் வரவேற் கிறோம். இப்பாதையூடாக அச்சம், பீதியின்றி மக்கள் சென்று வர வேண்டும். அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்படுவது மிகவும் அவசியமாகும்.
அதேநேரம், யாழ். குடாநாட்டு விளைபொருட்கள் தென் பகுதிக்கும் தென் பகுதிப் பொருட்கள் வட பகுதி க்கும் தங்கு தடையின்றி எடுத்துச் செல்லப்பட இப்பாதை பெரிதும் உதவும். இதன் பயனாக யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகள் பெருமளவில் குறையுமென எதிர்பார்க்கலாம்.
இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பலவிதமான அசெ ளகரியங்களுக்கு முகம் கொடுத்தார்கள். இது மறைக்க முடியாத உண்மையாகும். இப்பாதை திறக்கப்பட்டிருப் பதால் இத்துன்பங்கள் நீங்குமென எதிர்பார்க்கிறோம்.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டு நாட்டில் நிரந்தர அமைதி, சமாதானம் ஏற்படவும், மக்கள் வாழ் வில் சுபீட்சம் ஏற்படவும் பிரார்த்திக்கின்றோம்.
எஸ். மோகன், சாவகச்சேரி.
ஏ-9 வீதி திறப்பதன் மூலம் மக்கள் சுதந்திரமாக பய ணம் செய்வதற்கு வழி கிடைத்திருக்கிறது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே நட்புறவுக்கு வித்திடும் வகையில் ஏ-9 வீதி அமைய வேண்டும்.
2002 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் ஏ-9 வீதி திறக்கப்பட்ட போது மக்கள் ஆரவாரத்துடன் வரவேற் றனர். எனினும் அவர்களின் மகிழ்ச்சிகள் ஓரு குறுகிய கால த்திற்குள் புலிகளால் மழுங்கடிக்கப்பட்டன. அவ்வீதியால் பயணம் செய்த மக்கள் பல நெருக்குவாரங்களுக்கு முகங் கொடுத்தனர். வரிச் சுமைகளுக்குள் தள்ளப்பட்டனர்.
தற்போது அப்பகுதி விடுவிக்கப்பட்டு வீதி திறக்கப் படுவதென்பது குடாநாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமே. மக்கள் அதிக விலை கொடுத்து பொருட் களை வாங்கி வந்தனர். அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் தென் பகுதிக்குச் செல்லும் மக்கள் பல மடங்கு வரிப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டனர். அண்டை நாடான இந்தியாவிற்கு விமான பய ணச்சீட்டின் விலை 13 ஆயிரம் ரூபா என்றால் யாழ்ப்பா ணத்துக்கு 21 ஆயிரம் செலவாகின்றது. வெளிநாடுகளுக்கு செல்வது போன்று குடாநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை வீதி திறப்பின் பின்னர் முற்றாக மாறி விடும். மக்கள் எப்போது ஏ-9 வீதி திறக்கப்படுமென காத்திருக்கிறார்கள்.
மக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக பயணம் செய்யவே விரும்புகிறார்கள். அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த அரசுக்கு தமிழ் மக்களின் சார்பில் எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன்.
க. ராஜ்குமார், வெள்ளவத்தை,
ஏ-9 வீதி திறப்பதால் குடாநாட்டு மக்கள் மட்டுமல்ல. தென் பகுதி மக்களும் பெரிதும் சந்தோஷப்படுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் பெரிதும் நன்மை பயக்கும் விடயமாகும். வீதித் தடையை காரணம் காட்டி பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பல மடங்கு விலையைக் கூட்டி மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தினர். அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களுக்கு பல மடங்கு வரி விதிக்கப்பட்டது. இனப்பிரச்சினை ஏற்படுவத ற்கு முன்னர் இருந்தது போன்ற நிலை மீண்டும் வர வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். வடக்கை பிறப் பிடமாகக் கொண்ட நான் என் பிள்ளைகளுக்கு பிறந்த மண் ணைக் காட்ட வேண்டும்.
குடும்பத்துடன் சந்தோஷமாகவும் சுந்திரமாகவும் போய் வர வேண்டு மென்ற எனது நீண்டகாலக் கனவு இனியாவது நிறைவேற வேண்டும்.
தென் பகுதி மக்கள் வடக்கிற்கும் வட பகுதி மக்கள் தென் பகுதிக்கும் சென்று வருவதால் மக்களின் சிந்தனைப் போக்குகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பாதை திறக்கப்பட்ட பின்னர் இன்னொரு பாரிய பிரச்சி னைக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை வரலாம். வன்னி பெருநிலப்பரப்பில் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சி னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். யாழ். மக்களு க்கு கிடைக்கும் உதவிகள் வன்னி மக்களுக்கும் கூடிய விரைவில் பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசு வீதியை திறக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளையும், அபிவிருத்திப் பணிகளை யும் உடனடியாக மேற்கொள்வதன் மூலமே மக்கள் மனங் களில் இடம் பிடிக்கக் கூடியதாக இருக்கும்.
க. சண்முகம், கோப்பாய்
ஏ-9 வீதி திறந்ததும் நான்தான் முதல் ஆளாக கொழு ம்பு வருவேன். குடாநாடு எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா. தம்புள்ள மரக்கறிகள் வரும். இங்குள்ள பொரு ட்கள் தென் பகுதிக்குப் போகும்; சாமான்களின் விலை கள் குறையும்.
தினகரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment