புலிகளின் 5 ஆவது ஓடு பாதையை இராணுவம் மீட்பு-பாதுகாப்பு அமைச்சகம்
விடுதலைப் புலிகளின் 5வது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் 632வது படையணி இரணைமடுக் குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியிருப்பதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 100 மீற்றர் அகலமும் கொண்டது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
வீரகேசரி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment