முல்லைத்தீவு முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வே சமாதான பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் முல்லைத்தீவில் மேற்கொண்டுவரும் படை முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த முயற்சிகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் விடுதலைப் புலி முகவர்கள் முல்லைத்தீவு யுத்தத்தை நிறுத்துமாறு நோர்வே பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு நோர்வே தலையீடு செய்ய முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment