பாடசாலை பஸ்ஸை தவறவிட்ட 6 வயது சிறுவன் பெற்றோரின் காரை சுயமாக ஓட்டிச் சென்று விபத்து
பாடசாலை பஸ்ஸை தவறவிட்ட 6 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின் காரை சுயமாக செலுத்திச் சென்று விபத்துக்குள்ளான சம்பவம் அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியபோதும், தமது சின்னஞ்சிறு மகனின் உயிராபத்துமிக்க நடவடிக்கை தொடர்பில் கண்காணிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.
றிச்மன்ட் நகருக்கு சுமார் 6 மைல் தொலைவிலுள்ள 360 ஆம் இலக்கப் பாதையிலேயே சிறுவன் செலுத்தி வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தாயார் உறங்கிக் கொண்டிருந்த வேளை, பாடசாலையை நோக்கி காரை சிறுவன் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அவன் பாதை வளைவுகளில் கரை இலாவகமாகத் திருப்பி மைல் தூரம் அதனைச் வந்த நிலையில், சுவரொன்றில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள் ளது.
"கிரான்ட் தெப்ட் ஓட்டோ' மற்றும் "மொன்ஸ்டர் ட்ரக் ஜாம்' ஆகிய வீடியோ விளையாட்டுக்கள் மூலமே தான் கார் செலுத்தக் கற்றுக்கொண்டதாக கூறி சிறுவன் பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளான்.
இந் நிலையில் சிறுவனின் தாயான ஜக்குலின் வால்ட்மான் (வயது 26) மற்றும் தந்தையான டேவிட் எயுஜீன் டொட்ஸன் (வயது 40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் தந்தை மட்டும் 5000 சுமார் 6 டொலர் பிணையில் விடுதலை செய்செலுத்தி யப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment